ஓடிடி-யில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் லீக்கான படம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதிய படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிமி எனும் காமெடி படம், வருகிற 30 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருந்தது.
இந்நிலையில், இப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், சில இணையதளங்களில் மிமி படம் திருட்டுத்தனமாக வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் வேறு வழியின்றி திட்டமிட்டதற்கு முன்பாகவே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டுள்ளனர். இப்படம் இணையத்தில் எப்படி கசிந்தது என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறதாம்.
இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri