அய்யனார் துணை சீரியல் சோழனுக்கு வாட்ச் பரிசு கொடுத்த பிரபலம்... யார் தெரியுமா?
அய்யனார் துணை
விஜய் டிவி தமிழ் சின்னத்திரையில் இளைஞர்கள் கொண்டாடும் ஒரு தொலைக்காட்சியாக உள்ளது விஜய் டிவி.
சூப்பர் சூப்பரான ரியாலிட்டி ஷோக்கள், மக்கள் ரசித்து பார்க்கும்படியான சீரியல்கள் என ஒளிபரப்பி கலக்கி வருகிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் 10வது வருட டெலிவிஷன் விருது நடைபெற்றது.
இதில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பல கலைஞர்களுக்கு விருது கிடைத்துள்ளது. இந்த விருது நிகழ்ச்சியின் முதல் பாகம் நேற்று (செப்டம்பர் 14) ஒளிபரப்பாகி இருந்தது.
பரிசு
இந்த முதல் பாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என சூப்பரான அமைந்தது முதல் பாகம். விருது விழாவில் ஒரு சோகமான விஷயம் ஒன்று காட்டப்பட்டது.
அதாவது அய்யனார் துணை சீரியல் மூலம் மக்கள் மனதை வென்ற சோழன் என்கிற அரவிந்த் வாழ்க்கையில் கொரோனா காலத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அடுத்தடுத்த நாள் அவரது தாய்-தந்தை இருவரும் இறந்துள்ளார்களாம்.
இதனை சொன்னதும் அரங்கில் இருந்த அனைவருமே கண்ணீர்விட்டனர்.
அவருக்கு Find Of The Year என்ற விருது கொடுக்கப்பட்டது, அப்போது அவருக்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி ஒரு வாட்ச் பரிசாக கொடுத்திருப்பது தெரியவந்தது.