அச்சு அசல் அப்படியே ஏ.ஆர். ரஹ்மான் குரலில் பாடிய இசையமைப்பாளர்.. அசரவைத்த வீடியோ
ஏ.ஆர். ரஹ்மான்
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் வருகிற 30ஆம் தேதி வெளியாகிறது.
இதை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் இன்று இப்படத்திலிருந்து அக நக பாடல் வெளியாகிறது.
அசரவைத்த இசையமைப்பாளர்
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் போலவே பாடி பிரபல மலையாள இசையமைப்பாளர் ஒருவர் அனைவரையும் அசரவைத்துள்ளார்.
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற 'இரு பூக்கள்' பாடலை ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருந்தார்.
அதிலிருந்து சற்றும் மாறுபடாமல், அச்சு அசல் அப்படியே ஏ.ஆர். ரஹ்மானை போல் பாடி அசத்தியுள்ளார் நிகில். இவர் மலையாளத்தில் வெளிவந்த சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..
Wow ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 20, 2023
pic.twitter.com/c8NESE5DCV

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
