பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களில் மக்களின் மனதை கவர்ந்துள்ளது.
அதிலும், கண்ணன் கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் கோபம் கொண்ட மூர்த்தி, இருவரையும் வெறுத்து, இனி நீ என் தம்பி இல்லை என்று ஒதுக்கி விட்டார்.
இந்நிலையில், இந்த அணைத்து காட்சிகள் எடுப்பதற்கு முன்பு, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவணன் விக்ரமிற்கு, வண்டியில் சென்றுகொண்டிருக்கும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளதாம்.
ஆனால், விபத்து ஏற்பட்டதை சீரியல் குழுவிடம் கூறாமல், காயத்துடன் இந்த அணைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துள்ளாராம் நடிகர் சரவணன் விக்ரம்.
இந்த தகவலை அவரது தங்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.