தயவுசெய்து ரசிகர்களின் சண்டையை நிறுத்துங்கள்.. விஜய், அஜித்துக்கு கோரிக்கை வைத்த பிரபலம்
அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை
கடந்த பல வருடங்களாகவே டுவிட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
முதலில் படங்களை வைத்து சண்டை போட துவங்கிய ரசிகர்கள் அதன்பின் தகாத வார்த்தைகளையும் வைத்து பேச துவங்கினார்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை தவறான பெயரை வைத்து அஜித் ரசிகர்களும், அஜித்தை தவறான பெயர்களை வைத்து விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் பேசி வந்தனர்.
தொடர்ந்து நடந்து வரும் இந்த சண்டையால் டுவிட்டர் பக்கத்தில் பல பிரபலங்கள் கோபம் அடைந்துள்ளனர்.
கோரிக்கை வைத்த வாசுகி பாஸ்கர்
இந்நிலையில், தற்போது பிரபல பேஷன் டிசைனர் வாசுகி பாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த சண்டையை நிறுத்த அஜித் - விஜய் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
I kindly request @actorvijay avl / #ajithkumar avl 2step in give a statement ending this social war Vomiting in the name of love. Misusing ur names images n wasting time n creating a culture.
— vasuki bhaskar (@vasukibhaskar) March 26, 2022
This has to
STOP
or we are allowing a next generation from turning into antisocials.
அஜித் மற்றும் விஜய் இருவரும் இனிமேலாவது, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பலருக்கும் இந்த போட்டோ பிடிக்காது.. பெரிய உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா