கமல் விலகல், பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்கப்போவது இவரா?..கசிந்த தகவல்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய நிகழ்ச்சி, பிக் பாஸ்.
முதல் சீசனில் தொடங்கி தற்போது 5வது சீசன் வரை உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய கமல் ஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக டுவிட்டர் வழியாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் கமல், எவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் கமல் இடத்தை தனது மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன் பெயரும் அடிப்படுகின்றது.
அதன்படி பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக யார் தொகுத்து வழங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan