எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. உள்ளே புகைப்படத்தை பாருங்க
சமீபகாலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அண்மையில் கூட, பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம், தனது சிறு வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் படு வைரல் ஆனது.
இந்நிலையில், அதனை தொடர்ந்து தற்போது மறைந்த நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில், எம்.ஜி.ஆரின் மடியில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் வேறு யாருமில்லை, பிரபல முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு தான், அது.
ஆம், தனது சிறு வயதில், தன் பெரியப்பா இளையராஜா மற்றும் எம்.ஜி.ஆருடன், வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட இந்த அறிய புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆண்களுக்கும் இலவச பேருந்து; மகளிருக்கு ரூ.2,000 - தேர்தல் வாக்குறுதியை அறிவித்த அதிமுக News Lankasri