விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை 7 ஸ்கிரின் லலித் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞசய் தத், திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளாராக பணிபுரிந்தவர் லலித். கொரோனா காலகட்டத்தில் மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடலாம் என்று பல பேர் கூறியபோதிலும், விஜய்யின் முடிவால், அப்படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட தயாராக இருந்தவர் லலித்.
அப்போதிலிருந்தே விஜய்யின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக மாறிவிட்டார். அதை தொடர்ந்து வாரிசு படத்தின் தமிழக உரிமையை வாங்கி, அப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகவும் அவர் அமைந்தார்.
மேலும் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் விஜய்யின் லியோ படத்தை கூட லலித் குமார் தான் தயாரித்து வருகிறார். இதன்முலம் விஜய் நம்பிக்கையை பலமடங்கு சம்பாதித்த நபர்களில் ஒருவராக மாறியுள்ளார் லலித்.

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
