சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சென்சேஷன் நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி

doctor rashmika mandanna don sivakarthikeyan new pair
By Kathick Nov 18, 2021 01:00 PM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் டாக்டர்.

இப்படம் வசூல் ரீதியாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதே போல் விமர்சன ரீதியாகவும் இப்படம் வெற்றிபெற்றது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான், டான்.

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் First லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று இப்படத்தின் காட்சிகளில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் அனுதீப் கே.வி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க, சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US