பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைந்தது, 2ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்- யார் அவர்?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ், அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர். ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, லாவண்யா, குமரன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்து விரைவில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- இந்த தொடரா என ஷாக்கில் ரசிகர்கள்
பணம், பெயர், புகழ் என எது இருந்தாலும் பாசமுள்ள சொந்தம் இருந்தால் எதையும் வென்றுவிடலாம் என இந்த தொடர் காட்டி வருகிறது.
தற்போது சீரியல் மீனாவின் அப்பாவை அவருடைய இரண்டாவது மாப்பிளை பிரசாந்த் கொலை செய்துவிட்டு அந்த பலியை கதிர், ஜீவா மீது போட்டு விடுகிறார். அந்த கொலைக்கான உண்மை வெளியாகி குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள்.
2ம் பாகம்
முதல் சீசனில் பிரசாந்த் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில், இந்த தொடரில் இதுவரை வில்லனாக யாரும் நடித்தது இல்லை, நான் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒரே வில்லன்.
வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் என்னுடைய நடிப்பு திறமையை சரியாக பயன்படுத்தினேன். என்னை வில்லனாக பார்த்ததும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் பயந்தேன். பின் எல்லோருக்கும் பிடித்த உடன் சந்தோஷமாக இருந்தது.
அதேபோல் அனைவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் வருமா? என்று கேட்கிறார்கள், நிச்சயம் எதிர்பார்க்கலாம். அடுத்த சீசனிலும் எனக்கு வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.