புதிய வீடு வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகர் பாண்டி கமல்.. வீடியோவுடன் இதோ
பாண்டி கமல்
சன் டிவியில் சீரியல்கள் நடித்தாலே அவர்கள் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.
அந்த வகையில் யாராலும் மறக்க முடியாத நாதஸ்வரம் சீரியலில் நடித்து மக்களிடம் பெயர் வாங்கியவர் தான் பாண்டி கமல். பூவா தலையா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் நடிகராக மட்டுமில்லாது ஆர்ஜே, விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் கூட தனது சினிமா பயணம், சொந்த வாழ்க்கை குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்தார்.
புதிய வீடு
இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை பெற்றுள்ள பாண்டி கமல் தற்போது புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார்.
வீட்டில் முதன்முறையாக சென்றபோது எடுத்த வீடியோவை அவரே வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.