ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகைகள் - அட, இவங்களா
சன் டிவியில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
ஓரிரு வாரங்கள் TRPயில் பின்னடைவில் இருந்தாலும், பல வாரங்களாக, பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் நம்பர் 1 இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடித்து வர, பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரோஜா சீரியலில் புதிதாக திருமதி செல்வன் சீரியல் நடிகை கௌதமி வேம்புநாதன் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அவர் மட்டுமின்றி, நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஜெயந்தியும் ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதோ ரோஜா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்..