காஞ்சனா 4 படத்தில் இணைந்த முக்கிய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் அப்டேட்
காஞ்சனா 4
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் திரைப்படம் காஞ்சனா 4. இதற்கு முன் வெளிவந்த காஞ்சனா படங்கள் அனைத்தும் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், 4ம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன்படியே, கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தை கோல்டு மைன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். ரூ. 90 கோடி முதல் ரூ. 100 கோடி வரை இப்படத்தின் பட்ஜெட் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும். இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், சின்னத்திரையில் பிரபலமான கதாநாயகியான ஒருவர் இப்படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிமா பிந்து
அவர் வேறு யாருமில்லை நடிகை ஹிமா பிந்து தான். காஞ்சனா 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே, இலக்கியா ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri