ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த சன் டிவி சீரியல் நடிகை.. யார் தெரியுமா
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் வெற்றியை தேடி கொடுத்த திரைப்படங்களில் ஒன்று ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர், நடிகை மிர்னா. ஜெயிலர் படத்தின் வெற்றி நடிகை மிர்னாவிற்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
முதலில் நடிக்கவிருந்தது இவரா
இந்நிலையில், மிர்னா நடித்திருந்த ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தானாம். சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி தான் முதன் முதலில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்கவிருந்துள்ளார்.
ஆனால், அதன்பின் அவரால் நடிக்க முடியாமல் போனதன் காரணமாக நடிகை மிர்னாவை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சைத்ரா ரெட்டி தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரதில் நடிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/cd12e6a6-0c22-4f82-b19e-6f73c5c95257/25-67a3d1a393ab9-sm.webp)
சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)