கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை... இப்படி ஆகிடுச்சா?
சீரியல் நடிகை
ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வந்தவர் தான் கேரோலின்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பின் சன் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். தமிழ் மட்டுமில்லாது மலையாள சீரியல்களிலும் நடித்திருந்தார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். கர்ப்பமான கேரோலினுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
உடல்நிலை
குழந்தை பிறந்து 5வது மாதத்தில் தாய்ப்பால் கொடுத்துவிட்டு திரும்பும் போது தலை சுற்றல் வந்து விழுத்துள்ளார், மருத்துவமனையில் சேர்த்த போது வலிப்பு ஏற்பட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது நடிகை கோமாவிற்கு செல்ல ஒரு நாளைக்கு ரூ. 90 ஆயிரம் வரைக்கும் இவருக்கு மருத்துவ செலவு செய்யப்பட்டிருக்கிறது. 6 வருடங்களுக்கு மேலாக கோமாவில் இருந்தவரை நிறைய பண கஷ்டங்களை தாண்டி குடும்பத்தினர் மீட்டுள்ளனர்.
கோமாவில் இருந்து மீண்ட கேரோலினுக்கு தனது கணவர் மற்றும் குழந்தையே யார் என்று தெரியவில்லையாம். பிறகு அவருடைய திருமண புகைப்படங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த வீடியோக்கள் என எல்லாவற்றையும் காட்டி இருக்கிறார்கள்.
அதற்கு பிறகும் இவருக்கு நினைவு வரவில்லையாம். தான் கோமாவில் இருந்த விஷயத்தை கேரோலின் சமீபத்திய பேட்டியில் கூற ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.