வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்
வானத்தை போல
சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று வானத்தை போல.
இந்த தொடர் சின்ராசு மற்றும் துளசி என்ற அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
தொடர் ஆரம்பிக்கும் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டார்கள், அதாவது துளசி-சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மாறிவிட்டார்கள்.
அப்படி தொடரின் ஆரம்பத்தில் துளசியாக நடித்து வந்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணெதிரே தோன்றினாள் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
திருமணம்
நடிகை ஸ்வேதா சின்னத்திரையில் கலக்கிவரும் நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்த தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் ஸ்வேதாவிற்கும் விராந்த் என்பவருக்கு கோலாகலமாக அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஸ்வேதாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது திருமண செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.