வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை.. டிரைலரில் வெளிவந்த காட்சி
அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.
எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இருந்து வெளிவந்த Gilmpse வீடியோ, வேற மாறி, மதர் சாங், மேக்கிங் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை வெளிவந்த இப்படத்தின் டிரைலர், ரசிகர்களை கவர்ந்து Youtube-ல் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த டிரைலரில் குறிப்பிட்ட ஒரு காட்சியில், சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி, நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த காட்சியின் புகைப்படம்..