தல அஜித்தின் மனைவி ஷாலினியுடன் பிரபல சூப்பர்ஹிட் சீரியல் நடிகை.. அழகிய புகைப்படம்..
தல அஜித்தின் மனைவி ஷாலினியுடன் பிரபல சூப்பர்ஹிட் சீரியல் நடிகை.. அழகிய புகைப்படம்.. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித்.
இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகியுள்ளது. தல அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இன்று நடிகை ஷாலினியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரை நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷாலினியுடன், சத்யா சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆயிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பதிவு செய்து, ஆயிஷாவின் ரசிகர்கள், ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..
