முடிவுக்கு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்
சீரியல்
சமீபத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் முடிவு வருவதாக தகவல் வெளியானது.

இதில் குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது; அந்த சீரியலின் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்துள்ளது.
கெட்டி மேளம்
இந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' சீரியல் ஒன்று விரைவில் இறுதி கட்டத்தை எட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ குமார், சாயா சிங், சௌந்தர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியல், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. இதுவரை 329 எபிசோட்களை கடந்திருக்கிறது.

சமீபத்தில் கூட நடிகர் ஸ்ரீ குமார் கருப்பு வேடமிட்டு நடித்த காட்சிகள் இந்த சீரியலில் வைரலானது. ஆனால், தற்போது கெட்டி மேளம் சீரியல் முடிவுக்கு வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri