சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத முன்னணி பிரபலம்.. மிகவும் உருக்கமான வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
இதில் தற்போது சீசன் 8 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.
மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியை, ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த, மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம், தனது 40வது ஆண்டு பயணத்தை சூப்பர் சிங்கர் நிகழ்க்ச்சியில் கொண்டாட, பிரபல பின்னணி பாடகி, சித்ரா அவர்களை வந்துள்ளார்.
அப்போது, டாப் 7 போட்டியாளர்களின் ஒருவராக பரத்துடன் இணைந்து அவர், எஸ்.பி.பி பாடிய சூப்பர்ஹிட் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
அந்த பாடலை கேட்டு, பாடகர் எஸ்.பி. சரண் கண்கலங்கியுள்ளார். மேலும், தனது தந்தையை மிகவும் மிஸ் செய்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..