கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையின் சிறு வயது புகைப்படம்.. உங்களுக்கு இவங்க யாருன்னு தெரியுதா?
Popular south indian actress childhood photo: தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது; அவர் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
சிறு வயது புகைப்படம்
கடந்த 2021-ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் கால்பதித்த இவர், அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கடந்த 2025-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றி பெற்று தந்த நிலையில், அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. ஆனால், கடைசியாக இவர் நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக இந்த நடிகை, முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்திலும், முன்னணி ஹீரோக்களான சூர்யா மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் கதாநாயகியாக நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
அட, இவரா!
அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துகொண்டிருக்கும் கயாடு லோஹர்தான். ஆம், நடிகை கயாடு லோஹர் சிறு வயதில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu