மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நுழைந்த முக்கிய நட்சத்திரங்கள், புகழ் யாருடன் கூட்டணி தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
மேலும் தற்போது நடந்து வரும் குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.
இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனிடையே தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வரும் வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி நடைபெறவுள்ளது.
இதற்காக எலிமினேஷனால் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வைல்ட் கார்டு போட்டியில் ஜோடி சேரும் போட்டியாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
1. பவித்ரா - புகழ்
2. தீபா - ஷிவாங்கி
3. முத்து - பாலா
4. ரித்திகா - சரத்
5. தர்ஷா - சுனிதா
6. ஷகீலா - தங்கதுரை