மாநகரம், விக்ரம் வேதா படங்களை தொடர்ந்து இந்தியில் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படம் - ஹீரோ யார் தெரியுமா?

arun vijay vikram vedha managaram thadam
By Kathick Jul 30, 2021 09:20 AM GMT
Report

அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தடம். மகிழ் திருமேனி இயக்கியிருந்த இப்படத்தில் தன்யா ஹோப், யோகி பாபு, வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பான திரில்லர் படமாக இது அமைந்திருந்ததால், இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, இப்படம் தெலுங்கில் ‘ரெட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், தடம் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் அருண் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு முன் சமீபத்தில் மாநகரம் மற்றும் விக்ரம் வேதா என, தமிழில் சூப்பர்ஹிட்டான திரைப்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US