இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. அட இவர் தானா
வைரல் புகைப்படம்
திரையுலகில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர், நடிகை யார் என்று கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி நடிகையின் சிறு வயது புகைப்படம் திடீரென சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த சில ஆண்டுகளாக தான் திரையுலகில் ஜொலிக்க துவங்கியுள்ளார்.

ஆனாலும் கூட இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் படத்தில் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை மாளவிகா மோகனன் தான். முதலில் ரஜினியின் பேட்ட படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். பின் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறினார்.

மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தங்கலான் படத்திலிருந்து வெளிவந்த மாளவிகாவின் லுக் மிரட்டலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.