மீண்டும் சூப்பர்ஹிட் இயக்குனருடன் இணைந்து நாகசைதன்யா.. ஆனால், கதாநாயகி தமிழ் நடிகையாம்

Naga Chaitanya priya bhavani shankar vikram kumar
By Kathick Nov 18, 2021 06:40 PM GMT
Report

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நாகசைதன்யா.

இவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் சமீபத்தில் விவாகரத்து ஆனது. இது பலருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

மேலும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் நாகசைதன்யா, 'Thank You' மற்றும் 'Laal Singh Chaddha' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமாருடன் கைகோர்க்கவுள்ளாராம் நடிகர் நாகசைதன்யா.

இவர் இதற்கு முன் நாகசைதன்யாவை வைத்து மனம், Thank You ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த புதிய படத்தில் நக்சைதயாவிற்கு ஜோடியாக தமிழ் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து தமிழில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு, இப்படம் தெலுங்கில் அறிமுக படமாக அமையவுள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US