விஜய்க்கு வில்லனாகும் முன்னணி நடிகர்.. தளபதி 67 படத்தின் ஆறு வில்லன்கள் இவர்கள் தானா
தளபதி 67
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 67. இப்படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் என்று தகவல் வெளியானது.
அதில், சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

மேலும், நான்காவது வில்லனாக விஜய் சேதுபதியும், ஐந்தாவது வில்லனாக கவுதம் மேனனிடம் படக்குழு பேசி வருகிறார்களாம்.
ஆறாவது வில்லன்
இந்நிலையில், தளபதி 67 படத்தின் ஆறாவது வில்லனாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா நடிக்கப்போவதாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்த பிறகு, படத்தில் கமிட்டாகியுள்ள நட்சத்திரங்கள் யார்யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu