9 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட உதயநிதியின் திரைப்படம்.. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் விருது விழா
அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் சைக்கோ.
கடந்த வருடம் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இந்நிலையில் இப்படம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான SIIMA 2020 திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அப்படி என்னென்ன பிரிவுகளின் கீழ், இப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.
சிறந்த இயக்கம் - மிஷ்கின்
சிறந்த நடிகர் - உதயநிதி ஸ்டாலின்
சிறந்த இசை - இளையராஜா
சிறந்த பாடல் - உன்ன நினைச்சு - கபிலன்
சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நினைச்சு - சித் ஸ்ரீராம்
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - Double Meaning Productions
சிறந்த ஒளிப்பதிவு - தன்வீர் மிர்
ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் சைக்கோ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் SIIMA 2020 வரும் செப்டம்பர் 18, 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri