சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் படம் கதாநாயகி.. யார் தெரியுமா
சன் டிவி சீரியல்
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் ரோஜா, மகராசி, கயல், அபியும் நானும், சுந்தரி என பல சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில், மக்கள் பெரிதும் விரும்பி பார்க்கவும் சீரியல்களில் ஒன்றாகும் சுந்தரி. கடந்த ஆண்டு துவங்கிய இந்த சீரியலுக்கு தற்போது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
புதிய என்ட்ரி
இந்நிலையில், இந்த சீரியலில் நடிகை கவுசல்யா புதிய என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். விரைவில் இவருடைய காட்சி ஒளிபரப்பாகும் என்றும் தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கவுசல்யா நடிகர் விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து 90ஸ் காலகட்டத்தில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.