தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபல வில்லன் நடிகர்.. லோகேஷ் கனகராஜின் சம்பவம்
தளபதி விஜய்
வம்சி இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்படத்தின் First லுக் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று ஏறக்குறைய 99% சதவீதம் உறுதியாக கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 67ல் பிரபல வில்லன்
இந்நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நடிப்போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
ஆனால், லோகேஷ் கனகராஜ், கண்டிப்பாக தன்னுடைய ஒரு படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, கைதி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தவரும், மன்சூர் அலிகான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
