விஜய் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் பிரபல யூடியூபர்... யார் தெரியுமா?
விஜய் டிவி
விஜய் டிவி, சீரியல்கள்-ரியாலிட்டி ஷோ எது பார்க்க வேண்டும் எங்களிடம் எல்லாவற்றிலும் கைவசம் உள்ளது என ஒளிபரப்பி வருகிறார்கள்.
வார நாட்களில் சீரியல்கள், வார இறுதியில் படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்புகிறார்கள்.

புதிய ஹீரோ
விஜய் டிவியில் நிறைய சீரியல்கள் வரப்போகிறது என நிறைய செய்திகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் புதிய தொடர் புரொமோவும் வெளியாகி இருந்தது.
பிரபல சீரியல் நடிகை வினுஷா நாயகியாக நடிக்க சுட்டும் விழ சுடரே என்ற புதிய சீரியலின் புரொமோ வெளியாகி இருந்தது.
அதைப்பார்த்ததும் என்ன மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது விஜய் டிவி சீரியலில் நடிக்கும் ஒரு யூடியூபர் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது Chill Pannu Maapi யூடியூப் பிரபலம் ஜாய்சன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.