2 ஆண்டுகள் கடந்த போர் தொழில் திரைப்படம்.. மொத்தம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
போர் தொழில்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போர் தொழில்.
இப்படத்தை APPLAUSE எண்டர்டெயின்மெண்ட் – E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் – EPRIUS ஸ்டுடியோ இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தது.
இப்படம் வெளியான பின், ராட்சசன் படத்திற்கு பின் ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படமாக தமிழ் சினிமாவிற்கு போர் தொழில் கிடைத்துள்ளது என ரசிகர்கள் இப்படத்திற்கு பாராட்டு மழையை பொழிந்து வந்தார்கள்.
சிறந்த விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கு எந்த வகையிலும் குறை இல்லாமல் வசூலில் இப்படம் பட்டையை கிளப்பியது.
செய்துள்ள வசூல்
தற்போது இந்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இப்படம் மொத்தம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
