போர் தொழில் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த ஜாக்பாட்!.. இத்தனை கோடி லாபமா?
போர் தொழில்
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் ஜூன் 9 -ம் தேதி வெளியான போர் தொழில் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
இப்படத்தை APPLAUSE எண்டர்டெயின்மெண்ட் – E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் – EPRIUS ஸ்டுடியோ இரு நிறுவனங்கள் தயாரித்து இருந்தது.
தற்போது போர் தொழில் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11 -ம் தேதி வெளியாக இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இத்தனை கோடி லாபமா?
இந்நிலையில் போர் தொழில் மூலம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ரூபாய் 30 கோடி வருமானம் வந்துள்ளதாம். இப்படத்தில் இரு தயாரிப்பாளர்கள் இருப்பதால் 15 கோடியாக பிரித்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம் ரூபாய் 5 - 6 கோடி தான் பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஜெயிலர் படத்தின் ட்ரைலர் இதோ..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
