சினிமாவில் நுழைந்த டாப் குக் டூப் குக் வாஹீசன்.. முக்கிய படத்தில் கிடைத்த வாய்ப்பு!
பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'போராட்டம்'.
ராஜ் சிவராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

பாடலாசிரியர்கள்
போராட்டம் படத்திற்காக பாடல் எழுதி இருக்கும் பாடலாசிரியர்கள் பற்றிய அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது.
சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாப்புலர் ஆன இலங்கையை சேர்ந்த ராப் பாடகர் வாஹீசன் தற்போது போராட்டம் படத்தில் இணைந்து இருக்கிறார்.
மேலும் பொத்துவில் அஸ்வின், உமாகரன் ராசையா, அருண் N யோகதாசன், KS சாந்தகுமார் ஆகியோரும் போராட்டம் படத்திற்காக பாடல் வரிகள் எழுதி இருக்கின்றனர்.