அமெரிக்காவின் சர்வதேச பாடலாசிரியர் சங்க விருதுக்கு பொத்துவில் அஸ்மின் பரிந்துரை!
அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச பாடலாசிரியர் சங்கம் (International Singer Songwriters Association) 2025 ஆம் ஆண்டுக்கான விருது தேர்வை நடத்துகிறது.
இந்த தேர்வில் சர்வதேச பிரிவில் பொத்துவில் அஸ்மினின் பாடல் “முட்டக்கண்ணி” பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதர் மாஸ்டர், காயத்ரிசான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர்ஸ்ரீகாந்தேவா இசையமைக்க ஜெர்மனியில் வாழும் இலங்கைப் பாடகர் முல்லைசசி பாடியுள்ளார்.
இலங்கையில் உருவாக்கப்பட்ட தமிழ்பாடல்களில் அதிக பார்வையினை பெற்ற "அய்யோ சாமி நீ எனக்கு வேணாம்" பாடல் மூலம் உலகம் எங்கும் கவனம் பெற்ற பொத்துவில் அஸ்மின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் (International Male Songwriter of the Year) விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்:
International Male Songwriter of the Year
International Music Video of the Year (Muttakkanni Song)
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச பாடலாசிரியர் சங்கத்தின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா பாடலாசிரியர், கவிஞர் பொத்துவில் அஸ்மின் என்பது குறிப்பிடத்தக்கு.
இந்த விருதுக்கு இலங்கையர்கள் உங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
ஒரே தொலைபேசியில், நாளொன்றுக்கு ஒரு வாக்கு – 30 நாட்களுக்கு 30 வாக்குகள் அளிக்கமுடியும்
வாக்களிப்பு விவரங்கள்:
📅 ஏப்ரல் 02 - ஏப்ரல் 30 வரை வாக்களிக்கலாம்.
📅 மே 2 – இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
📅 தங்க விருது (Golden Awards) பெற்ற நடுவர் குழு இறுதி வெற்றியாளர்களை தேர்வு செய்யும்.
📅 ஆகஸ்ட் 23 (சனிக்கிழமை) – அட்லாண்டா, ஜார்ஜியாவில் நேரடி விருது விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
வாக்களிக்க👇
இணைப்பு: https://poll-maker.com/Q8AGK1JD3
🔹 Click – International Singer writer Association
🔹 Click – 2025 Vote
🔹 Click – International Nominee
🔹 Click – Male Songwriter of the Year
🔹 Select – Pottuvil Asmin (LK)
🔹 Click – Music Video of the Year
🔹 Select – Pottuvil Asmin (LK) – Muttakkanni
🔹 Next → End Vote
