விஜய்யை எதிர்த்து நிற்பேன்.. பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் பேச்சு
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
நகைச்சுவையின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவருடைய பேச்சு எப்போதுமே நகைச்சுவையாகவே இருக்கும்.
அதே போல் இவர் படங்களில் நடிக்கும் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களை வயிறு குலுங்க அனைவரையும் சிரிக்க வைக்கும். மேலும் லத்திகா எனும் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஆனாலும் கூட கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான் இன்று வரை இவருடைய அடையாளமகே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநிவாசன் பேச்சு
இந்த நிலையில், நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தளபதி விஜய்யின் அரசியல் குறித்து இவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் "முதலில் விஜயை களத்திற்கு வர சொல்லுங்கள், விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன்" என கூறியுள்ளார்.