பிரபாஸுக்கு ஜோடியாகும் பாலிவுட்டின் பிரபல நடிகை, யார் தெரியுமா?
இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்கும் நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், சமீபத்தில் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
மேலும் அப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராவதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஸ்பிரிட் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri