வசூல் சாதனை செய்யும் பிரபாஸின் பாகுபலி தி எபிக் படம்... இதுவரை எவ்வளவு வசூல்?
பாகுபலி தி எபிக்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் பாகுபலி.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாக பாஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது. இரண்டு பாகங்களும் சேர்ந்து உலகளவில் ரூ. 2400 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்த இரண்டு படங்களையும் இணைத்து பாகுபலி தி எபிக் என்ற படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியாகி இருந்தது.
உலகளவில் மொத்தமாக 1150க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகி இருந்தது. முதல்நாள் டிக்கெட் புக்கிங்கிலேயே சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் விற்பனையான இப்படம் மொத்தமாக ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
