மீண்டும் இரண்டு பிரமாண்ட திரைப்படங்களில் கமிட்டான நடிகர் பிரபாஸ்..? வெளியான சவரஸ்யா தகவல்
ராதே ஷ்யாம் படத்தை முடித்துள்ள பிரபாஸ் தொடர்ந்து சலார் மற்றும் ஆதி புருஷ் படங்களில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சந்தீப் ரெட்டி இயக்கும் தனது 25வது படம் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.
இந்நிலையில், இப்படங்களை தொடர்ந்து இன்னும் இரண்டு மெகா படங்களில் நடிப்பதற்கு பிரபாஸ் ஒப்பந்தம் போட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், சலார் படத்தை அடுத்த மீண்டும் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்று தெரிவிக்கின்றனர்.
அதோடு, சித்தார்த் ஆனந்த் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் பிசியாகி வருகிறார் பிரபாஸ் என்று திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri