பிரபாஸ் படத்திற்காக போடப்பட்ட செட் - ஆனால் நன்கொடையாக மருத்துவமனைக்கு கொடுத்த படக்குழு

covid 19 prabhas pooja hegde radhe shyam
By Karthick Raja May 11, 2021 02:00 PM GMT
Report

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ராதே ஷ்யாம். இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.

அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக,அணைத்து படங்களுடன் சேர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்துக்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர்.

அதன்படி அந்த செட்டில் உள்ள 50 படுக்கைகள், உடைகள் ஆகியவற்றை தனியார் மருத்துவமனைக்கு கொடுத்து உதவி உள்ளனர். ராதே ஷ்யாம் படக்குழுவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US