லோகேஷ் கனகராஜ் கதையை நிராகரித்த முன்னணி ஹீரோ! அவருக்கே இந்த நிலையா
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி இருக்கிறார். நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் லோகேஷ் மற்றும் குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.
விக்ரம் படத்தின் கிளைமாக்சில் சூர்யா வருகிறார் என்பதும் அவர் விக்ரம் 3ல் நடிக்கப்போகிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.aakkavia
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தைக்கு சென்றதாக தெரிகிறது. லோகேஷிடம் முழு கதையையும் கேட்ட பிரபாஸ், இது வழக்கமான கதை தானே, வேறு ஏதாவது பிரமாண்டமான கதை இருந்தால் கொண்டு வாருங்கள் என கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.
