இதனால் தான் இன்னும் திருமணம் செய்யவில்லை: பிரபாஸ் சொன்ன காரணம்
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக வளர்ந்துவிட்டார். அதற்கு பிறகு அவர் நடிக்கும் படங்களை பாலிவுட் ஆடியன்ஸை குறிவைத்து தான் தயாரிக்கப்படுகிறது.
தற்போது ராதே ஷியாம் என்ற படத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து இருக்கின்றனர். அந்த படம் மார்ச் 11ம் தேதி திரைக்கு வரும் நிலையில் பிரபாஸ் மீடியாவுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில் அவரிடம் திருமணம் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. தான் பாகுபலி படத்தை முடித்துவிட்டு உடனே திருமணம் செய்ய இருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை என பிரபாஸ் கூறி இருக்கிறார்.
"காதல் பற்றிய என் கணிப்பு பொய்யாகிவிட்டது. அது தான் நான் திருமணம் செய்யாததற்கு காரணம். பாகுபலி படம் நடித்தபோது, அதை முடித்துவிட்டு திருமணம் பற்றி யோசிக்கிறேன் என அம்மாவிடம் கூறி இருந்தேன். ஆனால் அவர் அதுபற்றி தினமும் பேசிக்கொண்டிருப்பார். எல்லா அம்மாவும் மகன் செட்டில் ஆக வேண்டும் என்று தான் விரும்புவார். இனி இதை பற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும், அது நிச்சயம் நடக்கும் என கூறிவிட்டேன்" என பிரபாஸ் தெரிவித்து உள்ளார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan