பாகுபலி 2 படத்திற்கு பிரபாஸுக்கு சலார் தான் ஹிட்டா?- இதுவரை படம் இத்தனை கோடி வசூலித்ததா?
சலார் படம்
KGF பட புகழ் இயக்குனர் அப்படத்திற்கு பிறகு யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
அதன்பிறகு அவர் பாகுபலி பட புகழ் பிரபாஸுடன் இணந்து சலார் என்ற திரைப்படத்தை இயக்குவதாக கூறி படத்தையும் முடித்து கடந்த டிசம்பர் 22ம் தேதி வெளியிட்டுவிட்டார்.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பில் இருந்த சலார், பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியானது.
பட வசூல்
பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் என வெயிட்டான பிரபலங்கள் இருந்தும் பட சரியான வரவேற்பை பெறவில்லை. விமர்சன ரீதியாக படம் அடிவாங்கினாலும் வசூல் தாறுமாறாக தான் நடந்து வருகிறது.
இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 590 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நிறைய படங்கள் நடித்தாலும் இப்படம் தான் அவருக்கு சுமாரான வரவேற்பை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
