இயக்குனர் ராஜமௌலிக்கு NO சொன்ன நடிகர் பிரபாஸ்.. காரணம் இதுதானா
மாவீரன், நான் ஈ, பாகுபலி படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி.
இவர் இயக்கத்தில் தற்போது ஆர்.ஆர்.ஆர் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிபோய்க்கொண்டே இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, ஒரு வழியாக சென்ற வாரம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று ஆர்.ஆர்.ஆர் படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால், அன்று பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படமும் வெளிவருகிறது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூல் அடிவாங்கும் என்று எண்ணியுள்ளாராம் ராஜமௌலி.
இதனால், பிரபாஸிடம் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸை ஒத்திவைக்க வேண்டுகோள் வைத்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி.
ஆனால் ராதே ஷ்யாம் படம் பல நாட்களாக தயாரிப்பில் இருப்பதால், ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடியாது என்று பிரபாஸிடம், அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளாராம்.
இதனால், ராஜமௌலியின் வேண்டுகோளுக்கு பிரபாஸ் NO என்று கூறிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.