பிரபாஸின் ஸ்பிரிட் ரிலீஸ் தேதி.. 1000 கோடி வசூலிக்குமா?
அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கி வரும் படம் ஸ்பிரிட்.
இந்த படத்தில் முதலில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க இருந்தார். ஆனால் இயக்குனர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபிகா விலகிவிட்டார். அவர் 8 மணி நேரம் தான் தினமும் ஷூட்டிங் வேறுவேன் என கூறியதாக அப்போது சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. தீபிகா கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பிரபலங்கள் தற்போது வரை கருத்து தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றனர்.
தீபிகா படுகோனுக்கு பதிலாக அந்த ரோலில் அனிமல் பட புகழ் நடிகிய தீருப்தி டிம்ரி ஒப்பந்தம் ஆனார்.

ரிலீஸ் தேதி
இந்நிலையில் தற்போது ஸ்பிரிட் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கின்றனர்.
2027 மார்ச் 5ம் தேதி ஸ்பிரிட் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக போஸ்டர் உடன் அறிவிப்பு வந்திருக்கிறது.
அனிமல் படம் வசூலில் 1000 கோடியை நெருங்கிய நிலையில், இந்த ஸ்பிரிட் படம் அந்த மைல்கல்லை தொடுமா என பிரபாஸ் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.