நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அதனால் தான்.. பிரபாஸ் சொன்ன விஷயம்
நடிகர் பிரபாஸ்
தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் சிங்கிளாகவே சில நடிகர்கள் உள்ளது போல் மற்ற மொழிகளிலும் டாப் நடிகர்கள் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்.
அப்படி தெலுங்கு சினிமாவில் 46 வயதாகியும் சிங்கிளாகவே உள்ளார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக வலம் வரும் பிரபாஸிடம் ரசிகர்கள் முக்கியமாக கேட்பது திருமணம் எப்போது தான்.

தி ராஜா சாப்
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரபாஸிடம், உங்களை மணக்க விரும்பினால் அந்த பெண் எப்படி இருக்க வேண்டும் என கேட்கிறார்.
அதற்கு பிரபாஸ், அது தெரியாமல் தான் நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறேன், தெரிந்தால் திருமணம் செய்துகொள்வேன் என ஜாலியாக கூறியுள்ளார்.
