பிரபாஸ்
நடிகர் பிரபாஸுக்கு அறிமுகம் தேவையில்லை. தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர் பாகுபலி ஹிட் ஆன பிறகு பான் இந்திய ஹீரோவாகிவிட்டார். அவர் அதற்குப்பிறகு பான் இந்திய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது ஆதிபுருஷ், சளார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்,
பிரபாஸுக்கு ஏற்கனவே 43 வயதாகும் நிலையில் எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

பிரபாஸ் சொன்ன பதில்
இந்நிலையில் தற்போது நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி வரும் Unstoppable With NBK சீசன் 2ல் பிரபாஸ் கலந்துகொண்டு பேட்டி அளித்திருக்கிறார். அதில் பிரபாஸ் ஜாலியாக பல கேள்விகளுக்கு பதில் கூறினார்.
திருமணம் பற்றி கேட்டதற்கு, "ஐடியா இல்லை சார். நான் கண்டிப்பாக திருமணம் செய்வேன், ஆனால்.. அது எப்போது என்பது எனக்கு தெரியாது" என கூறி இருக்கிறார்.
எத்தனை மணிக்கு வருகிறது துணிவு ட்ரெய்லர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu