பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ப்ரீ புக்கிங் மட்டும் இத்தனை கோடியா?
தி ராஜா சாப்
தெலுங்கில் தயாரான பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் பிரபாஸ்.
இவர் இப்போது மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளார்.
பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்தில் பிரபாஸுடன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
தமன் இசையில் தயாராகியுள்ள இப்படம் இன்று ஜனவரி 9 மாஸாக படம் வெளியாகி இருக்கிறது.

ப்ரீ புக்கிங்
பிரபாஸ் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். விமர்சனங்கள் எல்லாம் நல்லபடியாக வந்துள்ள நிலையில் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் குறித்து தகவல் வந்துள்ளது.
இப்படம் மொத்தமாக ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக விவரங்கள் வந்துள்ளன.
