தன்னை விட 22 வயது குறைந்த நடிகையுடன் கைகோர்க்கும் பிரபாஸ்.. இந்த கூட்டணி ஹிட்டாகுமா
நடிகர் பிரபாஸ்
Pan இந்தியா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியை தழுவியது.
இதனால் அடுத்த வெளிவரவிருக்கும் சலார் படத்தை தான் பிரபாஸ் மற்றும் பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் மலைபோல் நாம்பி காத்திருக்கிறார்கள்.

சலார் படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
புதிய கூட்டணி
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சீதா ராமம் படத்தின் மூலம் வெற்றிகண்ட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் பிரபாஸ் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

22 வயதாகும் நடிகை ஸ்ரீலீலா முதல் முறையாக 44 வயதாகும் பிரபாஸுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri