நடிகர் சூர்யாவிற்காக சாப்பிடாமல் காத்திருந்த பிரபாஸ்.. அதுவும் இரவு 11 மணி வரையாம்
சூர்யா - பிரபாஸ்
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் சூர்யா 42. இப்படத்தின் படப்பிடிப்பும், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெறுகிறதாம்.
இந்த சமயத்தில் சூர்யா நேரில் சந்தித்து, இரவு விருந்து அழைப்பு விடுத்துள்ளார் பிரபாஸ். சூர்யாவும் வருவதாக வாக்குக்கொடுத்துள்ளார்.

ஆனால், சூர்யாவின் படப்பிடிப்பு தாமதமாக துவங்கிய காரணத்தினால் படப்பிடிப்பு முடிய இரவு 11 மணி ஆகிவிட்டதாம்.
இனிமேல் இனிமேல் விருந்துக்கு செல்வது எப்படி என்று யோசித்த சூர்யா, தன்னை ஹோட்டலுக்குத்தானே பிரபாஸ் வரச்சொல்லியிருக்கிறார், எப்படியும் ஹோட்டல் உணவு தானே சாப்பிட போகிறோம்.
காத்திருந்த பிரபாஸ்
அதனால் இன்னொரு நாள் அவருடன் சாவகாசமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து, அதை அவரிடம் நேரிலேயே சொல்லி விடலாம் என அந்த ஹோட்டலுக்கே சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்று பார்த்ததும் சூர்யாவிற்காக 11 மணி வரை சாப்பிடாமல் காத்துகொண்டு இருந்துள்ளார் பிரபாஸ்

அதே போல் அது ஹோட்டல் சாப்பாடு இல்லை, பிரபாஸ் தனது வீட்டில் தன் அம்மா கையால் சமைத்த பிரியாணியை எடுத்து வந்துள்ளார். அதன்பின் சூர்யாவை அமர வைத்து பிரியாணி பரிமாறியுள்ளாராம் பிரபாஸ்.