தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஆன் ஸ்க்ரீன் ஜோடிகளில் ஒன்று பிரபு மற்றும் குஷ்பூ ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தையும் பிடித்துள்ளது. அப்படி, ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட, இந்த ஜோடி இணைந்து நடித்த படங்கள் குறித்து பார்க்கவிருப்பது தான் இந்த கட்டுரை.
சின்னத்தம்பி
பி. வாசு இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்தில் குஷ்பூ மற்றும் பிரபு இருவரின் ஜோடி பொருத்தமும் அப்போது திரை வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டது. அதிலும், இப்படத்தில் பிரபுவின் வெகுளித்தனமான நடிப்பு பலராலும் பாராட்டவும் பட்டது. பிரபு நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டித்துரை
பிரபு, குஷ்பூ இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படங்களில் ஒன்று பாண்டித்துரை. மனோஜ்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். கவுண்டமணி, ராதாரவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கிழக்கு கரை
சின்னத்தம்பி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் பி. வாசு இயக்கத்தில் பிரபு மற்றும் குஷ்பூ இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் கிழக்கு கரை. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் தோல்வியை தழுவியது.
நாளைய செய்தி
பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த திரைப்படம் நாளை செய்தி. 1992ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ஜி.பி. விஜய் மற்றும் விஜயன் இருவரும் இயக்கியிருந்தார்கள். இப்படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றாலும், கொஞ்சம் சுமாராக ஓடியது குறிப்பிடத்தக்கது.
உத்தமராசா
1993ஆம் ஆண்டு ராஜ் கபூர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் உத்தமராசா. இப்படத்திலும் குஷ்பூ மற்றும் பிரபு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மை டியர் மார்த்தாண்டன்
பிரபு, குஷ்பூ இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த நடித்த திரைப்படம் மை டியர் மார்த்தாண்டன். இப் படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி மிக அற்புதமாக இருந்தது. மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. ஆனால் படம் வெளிவந்த காலகட்டத்தில் சுமாராக ஓடியது குறிப்பிடத்தக்கது.
மறவன்
பிரபு மற்றும் குஷ்பூ இணைந்து நடித்து தோல்வியை தழுவிய படங்களில் மறவன் படமும் ஒன்றாகும்.
தர்மசீலன்
செய்யார் ரவி என்பவரின் இயக்கத்தில் பிரபு இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தர்மசீலன். இப்படத்தில் குஷ்பூ மற்றும் பிரபுவின் ஜோடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சின்ன வாத்தியார்
பிரபு இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய படங்களில் சின்ன வாத்தியாரும் ஒன்றாகும். இப்படத்தில் இவருக்கு ஜோடிகளாக ரஞ்சிதா, குஷ்பூ நடித்திருந்தனர். பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியடைந்தது.